Wednesday 9 September 2015

ஐவகை நிலங்களின் பெயர்க்காரணம்

ஐவகை நிலங்களுக்கு ஏன் அப்படிப்பெயர் வந்தது என்பது பற்றி ஒரு ப்ளாக்கில் படித்தேன். அதில் இருந்து எல்லாருக்கும் புரியும் படியான சில விவரங்களை மட்டும் இங்கு கொடுக்கிறேன்.

குறிஞ்சி மலர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மலரும். அதுவே அக்காலத்தவர் வருடங்களைக்கணக்கிட ஒரு குறியீடாகவும் இருந்திருக்கிறது. எனவே குறிஞ்சி என்று பெயர் வந்திருக்கலாம். அம்மலர் மலைகளின் மேல் தான் வளரும் ஆதலால் மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று அறியப்பட்டன.

முல்லை சாதாரணமாகக் காடுகளில் தான் காணப்பட்டது. இப்போது தான் நாம் வீடுகளில் வளர்க்கிறோம். ஆகவே காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் என்று அறியப்பட்டன.

ஒடித்தால் பால் வரும் கள்ளிச்செடிகள் நிறைந்த வறண்ட நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மருத மரங்கள் நிறைய நீர் வளம் உள்ள இடங்களில் தான் வளரும். நீர் வளம் நிறைந்த இடங்களில் தான் வயல்கள் இருக்கும். ஆகவே வயலும் வயல் காடு சார்ந்த இடங்களும் மருத நிலம் என்று அறியப்பட்டன.

நெய்தல் என்பது ஒரு நீர்த்தாவரம். கடலுக்கு அடியில் நிறையக்காணப்படும். ஆகவே கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது.

இந்த எல்லா நிலங்களுமே அங்கு வளரும் தாவரங்களை வைத்துத்தான் அறியப்பட்டன என்பது ஒரு சிறப்பு.

நாம் பள்ளிப்பருவத்தில் படித்ததை விட சற்று அதிகமான விளக்கம் இதில் இருக்கிறது என்று தோன்றியதால் பகிர்கிறேன்.


No comments:

Post a Comment