Tuesday 18 August 2015

கிழவி என்று நினைத்துவிடாதே


Wednesday, July 10, 2013



கிழவி என்று நினைத்துவிடாதே 

பதினோராம் நூற்றாண்டில் மால்வா நாட்டை ஆண்ட ராஜா போஜனுக்குகல்வி கேள்விகளில் விருப்பம் அதிகம்அவருடைய காலத்தில் அனைத்துமக்களும் கல்வி பெற்று விளங்கினார்கள்அவர்களுக்கு நிறைய பேச்சுசுதந்திரமும் இருந்தது.அவருடைய அவையில் மிகச்சிறந்த கல்விமான்கள்இருந்தனர்அரசருக்கு இந்தப்புலவர்களுடன் அளவளாவுவதில் மிகவும்விருப்பம்.

ஒரு நாள் அண்டைய அரசின் பண்டிதர் ஒருவர் போஜனுடைய அவைக்குவந்தார்.அரசர்  அவருடன் பேசிக்கொண்டே கிராமப்புறமாக நடந்து சென்றார்.பல சுவையான விஷயங்களைப்பற்றிப் பேசியதில் நேரம் போனதேதெரியவில்லைவழியும் தவறிப்போயிற்றுஒரு வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் அரசர்,'அம்மாஇந்த சாலை எங்கேபோகிறது?' என்று கேட்டார்அதற்கு அவள், 'இந்த சாலை எங்கும் போகாது.இதில் நடப்பவர்கள் தாம் எங்காவது போவார்கள்.ஆமாம்நீங்கள் யார்?'என்றாள்.

'நாங்கள் பயணிகள்என்றனர் அவர்கள்.

ஒரு புன்னகையுடன் மூதாட்டி கூறினாள்:, 'இந்த உலகில் இரண்டேபயணிகள் தாம் இருக்கிறார்கள்ஒன்று சூரியன்;மற்றது சந்திரன்நீங்கள்யார்உண்மையைக்கூறுங்கள்'.

'அம்மாநாங்கள் விருந்தாளிகள்என்றனர்.

'உலகில் இரண்டே விருந்தினர் தாம் உண்டுஒன்று செல்வம்மற்றதுஇளமைசொல்லுங்கள்நீங்கள் யார்?'

'நாங்கள் அரசர்கள்என்றனர்.

'அரசர்கள் இரண்டே பேர்ஒருவர் இந்திரன்மற்றவர் யமன்நீங்கள் யார்?'

இதற்குள் அரசருக்கும் அவருடன் இருந்த புலவருக்கும் அந்த மூதாட்டியின்அறிவுத்திறமையைக்கண்டு மிகுந்த வியப்பு ஏற்பட்டது.

தயங்கித்தயங்கி, 'நாங்கள் திறமைசாலிகள்என்றனர்.

'திறமைசாலிகள் இரண்டே பேர்-பூமி மற்றும் பெண்உங்களைப்பார்த்தால்இந்த இரண்டு மாதிரியும் தெரியவில்லைநீங்கள் யார்?'

சிறிது துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவர்கள் சொன்னார்கள், 'நாங்கள் பரதேசிகள்'

'நீங்கள் பரதேசிகள் இல்லைஉடலில் உள்ள ஆன்மாவும் மரத்தில் உள்ளஇலையும் தான் பரதேசிகள்உண்மையில் நீங்கள் யார்?'

அரசருக்கும் அந்தப்பண்டிதருக்கும் வியப்புக்கு மேல் வியப்புஆனாலும்ஒரு கிராமத்து மூதாட்டியிடம் எப்படி தோல்வியை ஒத்துக்கொள்வது?

'நாங்கள் ஏழைகள்என்றார்கள்.

'இரண்டே ஏழைகள் தான் உலகில் உண்டுகொல்லப்படுவதற்காகவேபிறக்கும் ஆடும்திருமணம்  செய்து கொடுக்கப்படுவதற்காகவே பிறக்கும்பெண்குழந்தையும் தான்சொல்லுங்கள்நீங்கள் யார்?'

வேறு வழியே இல்லாமல் இருவரும் சொன்னார்கள், 'அம்மாநாங்கள்என்ன சொல்லஎங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லைஉங்களுக்குத்தான்எல்லாமே தெரிந்திருக்கிறது.'

இதைக்கேட்ட மூதாட்டியின் முகம் புன்னகையால் விரிந்தது.மென்மையான் குரலில் கூறினாள், 'அப்படி வாருங்கள் வழிக்குநீங்கள்போஜ ராஜா என்பதையும் இவர் உங்களுடைய விருந்தினர்உங்களைப்பார்த்த உடனேயே தெரிந்து கொண்டு விட்டேன்.உங்கள்இருவருக்கும் உங்களுடைய அறிவுத்திறமையின் மேல் கொஞ்சம் கர்வம்வந்து விட்டதுஆகவே தான் இப்படியெல்லாம் பதில் சொன்னேன்இந்தவழியிலேயே செல்லுங்கள்இது உங்கள் அரண்மனைக்குச் செல்லும்.'

இருவரும் மூதாட்டியை வணங்கி நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.

(இந்த மூதாட்டி சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு ஆழமான பொருள்! )

(மன்னரிடம் துணிச்சலுடன் பேசும் பெண்ணும்சாதாரணப்பெண்ணைப் பேசஅனுமதித்து அவளிடம் இருந்து அறிவுரைகளைப் பணிவோடுகேட்டுக்கொள்ளும் மன்னனும் நம் பாரத நாட்டில் தான்இருந்திருக்கிறார்கள்!)


ஆதாரம்Indian Tales & Folk Tales

7 comments:

  1. (மன்னரிடம் துணிச்சலுடன் பேசும் பெண்ணும், சாதாரணப்பெண்ணைப் பேச அனுமதித்து அவளிடம் இருந்து அறிவுரைகளைப் பணிவோடு கேட்டுக்கொள்ளும் மன்னனும் நம் பாரத நாட்டில் தான் இருந்திருக்கிறார்கள்!

    சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
    Reply
  2. 'திறமைசாலிகள் இரண்டே பேர்-பூமி மற்றும் பெண். உங்களைப்பார்த்தால் இந்த இரண்டு மாதிரியும் தெரியவில்லை. நீங்கள் யார்?'

    Ma'm - can you explain the above? for rest others it was easy to understand; but this one am unable to get it. Thanks for posting a wonderful article.
    Reply
  3. The earth takes the seed in and produces the plants and trees. It holds its roots and helps it suck in the energy from her through the roots. A woman does the same. She holds the baby in her womb, gives birth to it, suckles it with her nectar, and helps it grow. Neither the earth nor the woman are tired of doing this. Can you compare this talent with any other? Other talents may make the world beautiful. These two possess a talent that is indispensable. Hope I have convinced you.
    Reply
    Replies
    1. Understood Ma'm. Thanks for explaining..

No comments:

Post a Comment