Tuesday 18 August 2015

Sunday, July 7, 2013

பதஞ்சலி முனிவர்

சமீபத்தில் பதஞ்சலி முனிவர் இயற்றிய 'நடராஜ ஸ்தோத்ரம்கேட்கும் பாக்கியம் கிடைததது . அதைப்பற்றி மேலும் அறிய முற்பட்ட போதுகிடைத்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிவபெருமானின் பக்தர்களில் மிக முக்கியமானவர் மூன்று பேர்நந்தி,வ்யாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி.

நந்தியைப்பற்றி நம் எல்லாருக்கும் தெரியும்.

வ்யாக்ரபாதர் என்னும் பக்தர் தனக்குப் புலியின் கால்கள் வேண்டும் எனவேண்டிப்பெற்றார்அதிகாலையில் பூஜைக்காக மலர்களைப்பறிக்கும் போதுபுலியின் கால்கள் இருந்தால் மரங்களின் மீது ஏறி மலர்களைப்பறிப்பதுஎளிது என்பதற்காக இந்த வேண்டுகோள். (புலிக்கு சம்ஸ்க்ருதத்தில்வ்யாக்ரம் என்று பெயர்புலியின் பாதத்தைக்கொண்டிருப்பதால்வ்யாக்ரபாதர்).

பதஞ்சலி முனிவரும் நமக்குத் தெரிந்தவர் தான்இன்று மிகவும் ப்ரபலமாகஇருக்கும் யோகாசனங்களை உருவாக்கியவர் இவர் தான்இவருக்கு மேல்பாதி உடல் மனிதனைப்போலவும் கீழ்ப்பாதி பாம்பைப்போலவும் இருக்கும்.இவருடைய தாய் தனக்கு மகப்பேறு வேண்டி இறைவனைத்தொழுத போதுஅவருடைய கையில் ஏதோ ஊர்வது போல் இருந்ததாம்ஒரு மிகச்சிறியபாம்பு நெளிந்து கீழே விழுந்ததாம்சிறிது நேரத்தில் அது குழந்தையாகமாறிவிட்டதாம்.
('அஞ்சலிஎன்றால் குவிந்த கை. 'பதஎன்றால் விழுதல்குவிந்த கைகளில்இருந்து கீழே விழுந்ததால் பதஞ்சலி என்று பெயர்). இவருடைய மிகஅழகான சிற்பம் ஈஷா யோக மையத்தில் இருப்பதை அனேகம் பேர்பார்த்திருக்கலாம்.

ஒரு நாள் இந்த மூவரும் சிவபெருமானின் நடனத்தைக்க்ண்டு களித்துவிட்டு அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்பதஞ்சலி இந்தநடனத்தைப்பற்றி ஒரு ஸ்தோத்ரம் எழுத விரும்புவதாகத்தெரிவித்தார்.மற்ற இருவரும் கிண்டலடித்தனர்-'உனக்குக் கொம்பும் இல்லைகாலும்இல்லைஉனக்கெல்லாம் ஏன் இந்த ஆசைஎன்று. (நந்திக்குக்கொம்பைப்பற்றிப் பெருமைவ்யாக்ரபாதருக்குத் தன் பாதங்களைப்பற்றிப்பெருமை.) பதஞ்சலிக்கு அதில் வருத்தம் இருந்தாலும் ரோஷம் வந்தது. 'அதனாலென்னநாம் கொம்பும் காலும் இஇல்லாமலே ஸ்தோத்ரம்இயற்றுகிறேன்என்று கூறி ஒரு அற்புதமான ஸ்தோத்ரத்தைஇயற்றியுள்ளார்அது 'பதஞ்சலி க்ருத சரண ஸ்ருங்க ரஹித நடராஜஸ்தோத்ரம்என்று இன்றளவும் அறியப்படுகிறதுஒரு இடத்தில் கூட கால்வாங்காமல்கொம்பு போடாமல் அவர் இயற்றியுள்ள இந்த ஸ்தோத்ரத்தை.எஸ்அருண் பாடியிருக்கிறார்கேட்டு ஆனந்தியுங்கள்.


2 comments:

  1. மிக்க நன்றி .....
    Reply
  2. ஒரு இடத்தில் கூட கால் வாங்காமல், கொம்பு போடாமல் பதஞ்சலி இயற்றியுள்ள அருமையான ஸ்தோத்திரத்தின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
    Reply

No comments:

Post a Comment